மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை..! தமிழக பாஜக தலைவர் தமிழிசை பெற்றார்..!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் மாநில பாஜக தலைவர்களுக்கு வழங்கும் நிகழ்வு டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது இதில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநில தலைவர்களுக்கு வழங்கினார் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் தமிழிசை சவுந்தராஜன் அஸ்தி கலசத்தை பெற்றுக்கொண்டார்.
மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் 29 மாநில தலைவர்களும், 7 யூனியன் பிரதேச தலைவர்களும் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது