மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்….அமைதி ஊர்வலத்தில் முதல்வர் ,துணை முதல்வர் பங்கேற்பு…!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலமாக செல்கின்றனர். இதனைதொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நினைவு தின உறுதிமொழி எடுக்கவுள்ளனர்.இதனிடையே, ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
dinasuvadu.com