மரணதண்டனையிலிருந்து தப்பிய எல்லை பசு.! தாய் சிசு உயிர் தப்பியது..!
ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பசு, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத செர்பியாவிற்குள் நுழைந்ததால், அந்த பசுவிற்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கர்ப்பிணியான அந்த பசுவிற்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்த PENKA என்கிற பசு தனது நாட்டு எல்லையோரம் மேய்ந்துகொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வழிதவறி செர்பிய எல்லைக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்ட பசுவிற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆதரவு குரல்கள் ஒலிக்கத்துவங்கிய நிலையில், ஐரோப்பிய யூனியன் அதற்கு செவிசாய்த்திருக்கும் நிலையில், PENKA பசு மரண தண்டனையிலிருந்து தப்பியது.