மம்மிகளின் உலகம் எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு திறக்கப்பட்டது..!!

Default Image

மம்மிகளின் உலகம் என்ற அழைக்கப்படும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் 4,400 ஆண்டுகள் பழமையான பிரமிடை வெற்றிகரமாக வெளி உலகிற்கு காட்டியுள்ளனர்.
எகிப்து நாட்டின் பழங்கால மன்னர் ஆட்சியில் 3 ஆம் மன்னனாக இருந்த  நெஃபெரிர்கரே ககய் (Neferirkare Kakai) காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிடில் இந்த அரச குடும்பத்தைச் சார்ந்த யாரைவாது புதைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Related image
இந்த பிரமிடுகளில் வரைபடங்களால் ஆன எழுத்து ஒவியங்களும், சிற்பங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் 5 சுரங்க வகையான வாயிற்குழி கதவுகளில் ஒன்று கூட இந்த காலம் கட்டம் வரை திறக்கப்பட்டு களவாடப்படவில்லை என  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் சீலிடப்படாத ஒரே ஒரு கதவு ஒன்றை மட்டும் திறந்தபோது அங்கு வெறும் குப்பைகள் மட்டுமே இருந்தது மீதம் எஞ்சியுள்ளவற்றில் பதப்படுத்தப்பட்ட உடல் மற்றும் இறந்தவர் பயன்படுத்திய ஆடை, அணிகலன் மற்றும் அறைகலன் போன்ற பொக்கிஷங்களும் இருக்கலாம் என தெரிவித்தனர்.இதனால் 4400 வருடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடந்த இந்த பிரமீடு தற்போது திறக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற உள்ளது.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்