மனிதர்களை தயாரிக்க போகும் சீனா…20 வெவ்வேறு நாய்களை தயாரித்து அசத்தியது…!!

Default Image
சீனா முதல் முறையாக வெவ்வேறு வகையான 20 நாய்களை குளோனிங் செய்து வெற்றி பெற்று உள்ளது. விரைவில் அடுத்த கட்டமாக மனிதர்களை குளோனிங் செய்ய உள்ளது.
சீனா ஆய்வகத்தில் 12 வயது ஸ்க்னாசர்  இன நாயின் குட்டிகளை  குளோனிங் முறையில் செய்து உள்ளது  என சீன  ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த செயல்முறை ஸ்க்னாசர்   நாயில்  இருந்து தோல் மாதிரிகளை  எடுத்து மற்றும் செல்கள் குளோங்கில் ஈடுபடுத்தப்பட்டது.நாய் உரிமையாளர் யார் வாங் யிங்கிங் குளோனிங் குட்டிகளின்  தந்தை  படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
சீனாவில் முதல் குளோங்  செய்யப்பட்ட நாய் 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நடைமுறையில் இருந்து பெரிய சவால்களை கண்டுள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாதம் குளோனிங் தொழில்நுட்பம்  மூலம்  சீன வல்லுநர்கள் ஆய்வகத்தில் நாய்களின் 20 வெவ்வேறு இனங்களைப்  உருவாக்க  அனுமதி சீனா அளித்துள்ளது.
ஆனால் குளோனிங் அதே டி.என்.ஏ யின் விலங்குகளை உற்பத்தி செய்யும் போது அது அதே மனநிலையுடன் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது வளர்ந்து வரும் நிலையில் தான் தெரியும்.அடுத்த படியாக  மனிதர்கள் தான் குளோனிங் முறையில்   உருவாக்கப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்த  சிறப்பியல்புகள் வேண்டும் என  தேர்வு செய்து  குளோனிங் செய்யலாம்.
இது குறித்து டார்ட்மவுத்திலுள்ள  உயிரியல் நிபுணர் ரொனால்ட் கிரீன் ஏற்கனவே  எச்சரித்து இருந்தார்.
ஸ்டென் செல்  சோதனை மூலம் மனித ரத்தத்தில் இருந்து கடந்த மாதம், ஜப்பானிய விஞ்ஞானிகள் மனித முட்டை செல்களை உருவாக்கி  இருந்தனர். ஆரம்ப முட்டைகளை மனித குழந்தைகளாக வளர்க்க முடியாது, ஏனென்றால் அவை மிகவும் முதிர்ச்சியற்றவை. ஆனால் சோதனை என்பது நிச்சயமாக மனிதனை குளோனிங் மூலம் உருவாக்குவதின் முதல் அடி இதுவாகும்.
ஸ்டான்போர்டை சேர்ந்த  உயிரியல் நிபுணர்  விஞ்ஞானி ஹாங்க் கிரேலி கூறும் போது  தோல் செல்களில்  இருந்து  நாம் மனித முட்டைகள் மற்றும் விந்து உருவாக்க முடியும் என்றால் மனிதர்களை  குளோனிங் செய்யும்  சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன என கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்