மணிக்கு 120கி.மீ. வேகத்தில் புயல் தாக்கியதால் மடகாஸ்கர் நாட்டில் கடும் பாதிப்பு!
புயலாலும் மழைவெள்ளத்தாலும் மடகாஸ்கர் நாட்டின் கிழக்குப் பகுதியில் 17பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை நேற்று எலியாகிம் என்கிற புயல் தாக்கியது. மணிக்கு 120கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியதுடன் பலத்த மழையும் பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த ஆறாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழை, வெள்ளம் தொடர்பான நிகழ்வுகளில் 17பேர் உயிரிழந்ததாக மடகாஸ்கர் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.