மணல் கொள்ளையால் தான் மதகு உடைந்தது..!!வைகோ பகீர்..!!
அதிகளவில் மணல் கொள்ளையால் முக்கொம்பு அணையின் மதகுகள் சேதம் அடைந்துள்ளன மற்றும் மணல் கொள்ளை, தூர்வாரப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் நேற்று 8 மதகுகள் தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு மதகு நீரால் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள வெள்ள நிவாரணத்திற்கான வெளிநாட்டு உதவிகளை மனிதாபிமானம், மனிதநேயத்தோடு ஏற்று கொள்ள வேண்டும். வெளிநாட்டு நிதி குறித்த சட்டவிதிகளையும், கடந்த கால முடிவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.கேரள வெள்ளத்துக்கு வெளிநாடுட்டில் இருந்து நிதியை பெற இயலாது என மத்தியரசு சூசக தகவலை தெரிவித்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU