மணப்பெண் செய்யுற வேலையா இது…பதறவைக்கும் போட்டோ , வீடியோ…!!
திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. ஆனால் வித்தியாசத்தை விரும்பிய மணப்பெண்கள், தங்கள் உடையில் தீ வைத்து, அவற்றைப் புகைப்படமாக எடுக்க போஸ் கொடுத்தனர்.அமெரிக்காவின் அயோவா மாகாணத்தைச் சேர்ந்த பெண்கள் ஏப்ரல் சோய், பெத்தானி பைர்னஸ். சாகசக்காரர்களான இருவரும் நெருப்பை அடிப்படையாகக் கொண்ட ஸ்டண்ட்களை மேற்கொள்வதில் வல்லவர்கள்.
திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இருவரும் தங்களின் திருமணத்தன்று நெருப்பு ஸ்டண்ட் செய்ய விரும்பினர். திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை அசத்த ஆசைப்பட்ட இருவரும், தங்களின் திருமண உடையில் நெருப்பை வைத்துக் கொண்டனர். நீளமான கவுனில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

முன்னதாக தங்களின் கால்களைப் பாதுகாக்க நெருப்பைத் தடுக்கும் உடைகளை அணிந்தனர். எதிர்பாராத விதமாக நெருப்பு பரவினால் கவுன் தானாகக் கழன்று விழுந்துவிடும் வகையில் ஆடையை வடிவமைத்தனர்.மதியத்தில் திருமண வரவேற்பை முடித்த அவர்கள், சூரியன் மறையும் நேரத்தில், இருட்டில் போட்டோ ஷூட் நடத்தினர். நெருப்பு ஸ்டண்ட்டை மேற்கொள்வதற்கு முன்னால் ஏராளமான முறை ஒத்திகை பார்த்தனர்.
வீடியோ
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றுக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
dinasuvadu.com