மடிக்கணினிகளை இயக்க கற்றுக் கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் பிரதமர் எச்சரிக்கை..!
6 மாத காலத்திற்குள் மடிக்கணினிகளை இயக்க கற்றுக் கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி எச்சரித்துள்ளார்.
இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள அவர், அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளார். தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய கே.பி ஒலி, அலுவலகப் பணிகளை முற்றிலும் கணினிமயமாக்குவது தொடர்பாக ஏற்கெனவே அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.
6 மாத காலத்திற்குள் மடிக்கணினிகளை இயக்க தெரியவில்லை என்றால் , எந்த அமைச்சராக இருந்தாலும் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.