“மகனையும் கிரிக்கெட் வீரராக்கிய கேப்டன்” செல்வாக்கை தவறாக பயன்படுத்தினாரா..?
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய கிரிக்கெட் அணி தேர்வாளருமான இன்சமாம் உல் ஹக் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அவர் தன் பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி மகனுக்கு கனிஸ்ட அணியில் இடம் பெற்றுக் கொடுத்துள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை பாகிஸ்தான் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அப்துல் காதிர் கூறியுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இன்சமாமின் மகன் சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சேர்க்கப்பட்டார். இன்சமாமின் மகன் முதலில் அணியில் சேர்க்கப்படவில்லை எனவும், அதன் பின் இன்சமாம், கனிஸ்ட அணி தேர்வாளர் பாசித் அலிக்கு அழுத்தம் கொடுத்து தன் மகனை அணியில் இணைத்தார் என குற்றம் சாட்டியுள்ளார் அப்துல் காதிர்.
எனினும் இதை கடுமையாக மறுத்துள்ள இன்சமாம், இதை நிரூபித்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாகவும், மேலும், இந்த விஷயத்தை தாம் அவ்வளவு எளிதில் விடப்போவதில்லை எனவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை சந்தித்து பேசவுள்ளதாகவும்“ கூறியுள்ளார்.
DINASUVADU