போலந்து குத்துசண்டை போட்டி : லவ்லினா வெற்றி

Default Image

போலந்தில் நடைபெற்று வரும் 13-ஆவது சைலிஷியன் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹேன் வென்றார். வெல்டர்வெயிட் 69 கிலோ பிரிவில் லவ்லினா 4-1 என்ற புள்ளிக்கு கணக்கில் ரஷியாவின் அஷிஷாவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

லவ்லினா ஏற்கனவே இந்தியா ஓப்பனில், தங்கம், உளன்பட்டார் கோப்பையில் வெண்கலம் வென்றார். ரிது கிரேவால் 51 கிலோ பிரிவில் 5-0 என்ற புள்ளிகணக்கில் போலந்தின் ரோஸாவை வீழ்த்தினார். இந்தியா சார்பில் மேரி காம் (48 கிலோ ), சரிதா தேவி (60 கிலோ ), சஷி சோப்ரா (57கிலோ ), மனிஷா (54 கிலோ ) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இப்போட்டியில் இங்கிலாந்து, கஜகஸ்தான், பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் உள்பட 21 நாடுகளின் வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்