பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்த தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தாந் நாட்டில் உள்ள பஞ்சாபில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி என்கிற பெண் மீது வழக்குப் போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துவரான ஆசிய பீபீக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தது இந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்த்தியதாக தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியை சேர்ந்த 86 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள அந்நாடு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 86 பேர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது மட்டுமல்லாமல் 12 லட்சம் அபராதமும் விதித்து உள்ளது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…