போனை இல்லாமல் இருக்க….ரூ 72,00,000 பரிசு…வினோத போட்டி நடத்தும் தனியார் நிறுவனம்…!!
ஸ்மார்ட்போனை ஒரு வருடத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைட்டமின் வாட்டர் என்னும் தனியார் நிறுவனம் வினோதனமான போட்டியை அறிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு 72 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ள அந்நிறுவனத்தின் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போட்டியில் கலந்து கொள்வது குறித்து பதிவிட வேண்டும் என்றும் பின் நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்பதை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டே பரிசு தொகை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.