போதும் அமருங்கள்…..அமெரிக்கா அதிபருடன் செய்தியாளர் வாதம்….நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சி.என்.என். செய்தியாளருக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது.இதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது, சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்ட அகோஸ்டாவிடம், போதும் அமருங்கள் என டிரம்ப் கூறினார். இந்த விவகாரத்தால், டிரம்ப், பத்திரிகையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு முடிவுற்ற பின்னர், செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டா வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அனுமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கு வாஷிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சி.என்.என். செய்தியாளரின் நுழைவு சீட்டை உடனடியாக திரும்பி அளிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜிம் அகோஸ்டாவுக்கு மீண்டும் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளை மாளிகை நிர்வாகம் பத்திரிகையாளர் உரிமைகளை மீறி உள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த தீர்ப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதற்கு முழுத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம்” என சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
dinasuvadu.com