இழந்த பதவியை மீட்டுத்தரும்…மேலும் பல பலன்களை தரும் தைப்பிரதோஷம் இன்று..!

Default Image
  • தைப்பிரதோஷம் இன்று நடைபெறுகிறது.
  • பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம். 

இன்று பிரதோஷம் அதுவும் புதன் கிழமை மற்றும் தைப்பிரதோஷம் மிகவும் விஷேசம் நிறைந்த பிரதோஷம் பொதுவாகவே பிரதோஷம் என்பது ஞானம் மற்றும் யோகத்தை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பக்கத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்வதம் மூலம் நினைத்த பலனை அருளும் வல்லமை பிரதோஷ வழிப்பாட்டிற்கு உண்டு.

பிரதோஷ நாட்களில் சிவனாருக்கு எவ்வாறு அபிஷேக ஆராதனைகள் நடக்குமோ அவ்வாறே நந்தி தேவர்க்கும்  ஆராதனைகள் விமரிசையாக நடக்கும். நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும்.

பால், தயிர், திரவியப்பொடி,  சார்த்துங்கள்தேன், அரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை முடிந்தால் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால் வேண்டியதை அருளுவார்.அதே போல் சிவனாருக்கு வில்வம் மாலை சார்த்து வதம் மூலம் வெற்றி கிடைக்கும்.

பிரதோஷநாட்களில் முடிந்தால் யாருக்காவது 4 பேருக்கு தயிர்சாதமோ எலுமிச்சை சாதமோ அன்னமிடுங்கள்.தைப்பிதோஷம் தடைப்பட்ட சுபகாரியங்கள் வெற்றிக் கிடைக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.இழந்த பதவியை மற்றும் கெளரவத்தை மீட்டுக் கொடுக்கும் வலிமை கொண்டது. வீட்டில் சுபிட்சத்தை அளிக்கும்.

இன்றைய நாளில் விரதம் இருந்தும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் இன்று முழுவதும் சிவச்சிந்தனையோடு ஜந்து எழுத்து மந்திரத்தை உச்சரித்து மாலை நேரத்தில் மார்கண்டேயனையும் கனங்களுக்கு தலைவனான நந்தீஸ்வரையும் வழிபாடு செய்யுங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒளி பட்ட பனிப்போல் உருகி ஓடிவிடும்.நம்புங்கள் நிச்சயம் வாழ்வில் வழிபாடு வசந்தத்தை உண்டாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்