பேரிக்காயில் உள்ள சத்துக்கள்..
ஒரு குறிபிட்ட காலங்களில் கிடைக்ககூடிய காய் வகைகளில் பேரிக்காயும்
ஓன்று.இது மிகவும் சுவை உடையது ஆகும்.இது உடலுக்கு பல்வேறு நன்மை பயக்கும் சத்துக்களை உடையது ஆகும்.
பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தை பேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்.