பேரிக்காயின் பெருமை மிக்க மருத்துவகுணங்கள்…!!!
பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி.
இது பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீராட்டு வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேரிக்காயின் தோலின் துவர்ப்பு தன்மை தான் இதன் பலமே! இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.
கர்பிணிப்பெண்கள் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தை பேருக்கு பின்னால் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும். பேரிக்காய்க்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றலும் உள்ளது. வளரும் குழந்தைக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.