பேரப்பிள்ளைகள் வேண்டும்….மருமகளை உயிருடன் புதைத்த தம்பதி…!!
சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கான்கிரீட்டால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் சாவ் பாலோ நகரில் சேர்ந்தவர் இளம்பெண் மார்சியா மிராண்டா. கணவரை பிரிந்து வாழ்ந்த மார்சியா மிராண்டாவின் இரு பிள்ளைகள் மீதும் கணவரின் பெற்றோர் மரியா ஐசில்டா(60) மற்றும் பெர்னாண்டோ டி ஒலிவேரா(62) ஆகிய இருவருக்கும் ஆசை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் மார்சியா மிராண்டாவை கொலை செய்து விட்டு குழந்தைகளை வளர்க்கத் திட்டமிட்டு உள்ளனர்.இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மிராண்டா மாயமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமது இரு பிள்ளைகள் பேரில் வங்கிக் கணக்கு ஒன்றை துவங்கும் நோக்கில் தமது மாமியார் மற்றும் மாமனாரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக தாங்கள் வாங்கிய குடியிருப்பு மற்றும் நிலத்தை பார்வையிட மிராண்டாவை அவர்கள் நிர்பந்தித்து அழைத்துள்ளனர்.அவர் கொண்டு வந்த காரில் மிராண்டாவுடன் சாவ் பாலோ நகரில் உள்ள அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.ஆனால் மிராண்டாவை கொலை செய்து புதைப்பதற்கு என்றே அந்த குடியிருப்பு மற்றும் நிலத்தை அவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குறித்த பகுதியில் இருந்து மிராண்டாவின் உடலை கைப்பற்றும்போது அது மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்து இருந்தது. மிராண்டாவின் விரல் அடையாளங்களே அவரை அடையாளம் காட்டியுள்ளது.
dinasuvadu.com