பெரு நாட்டின் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்து ; 36 பேர் பலி
பெரு நாட்டின் தலைநகரான லீமாவில் 57 பயணிகளுடன் பயணித்த பேருந்து மலைச்சரிவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இந்த கோரவிபத்தில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.