பெரும் சர்சையை கிளப்பிய சவுதி ஆடை அணிவகுப்பு!பெண்கள் இல்லாமல் எப்படி நடத்தலாம்?
சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த ஆடை வணிவகுப்பு நிகழ்ச்சி சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலுள்ள ஓட்டல் ஒன்றில் மாடல்கள் இல்லாமல் இயந்திரம் மூலம் காற்றில் விநோதமாகப் பறந்து வரும் அந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
ஆடை வடிவமைப்பாளர்களும், நெட்டிசன்களும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். ”இவர்கள் எந்த காலத்தில் வாழ்கிறார்கள்?” பெண்களை அனுமதிக்கவில்லையா? ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியை காயப்படுத்திவிட்டார்கள்” என தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த ஆடைக் கண்காட்சியை நடத்திய அமைப்போ, ‘இது புது முயற்சி’ என்று கூறியுள்ளது.
சவுதியைப் பொறுத்தவரை அங்கு உடை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு இன்னும் கூடுதலாகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சமீபகாலமாக சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி அளித்தல் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/dontcarebut/status/1004456736961564674
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.