பெரும்பான்மை வாக்கெடுப்புடன் வெற்றி பெற்றார் தெரசா மே….!!
பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பொது வாக்கெடுப்பு நடத்தியதை அடுத்து தனி நாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் , வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பான உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த பல எம்.பிக்கள் தெரசாவிற்கு எதிராக ஆதரவு திரட்டி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 317 ஓட்டுகளில் 200 ஓட்டுகள் பெற்று தெரசா வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.