பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்….இந்தியா ஆஸ்திரேலியா இன்று மோதல்…!!
மகளிருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.
மகளிர் அணிக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 2 பிரிவாக மோதி வருகின்றன இன்று நடைபெறும் லீக் ஆட்டம் இந்திய அணி , ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்த போட்டி புரோவிடென்சியில் நடைபெறுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுமே தங்கள் பிரிவில் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து தோல்வி சந்திக்காமல் அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.இரண்டு அணியிலும் திறமையான வீராங்கனைகள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 14 முறை மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், ஆஸ்திரேலிய அணி 11 முறையும் வென்றுள்ளன இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
dinasuvadu.com