பெண்கள் ‘பிரா’ அணியலாமா.? வேண்டாமா.? அதிர்ச்சி ஆய்வு அறிக்கை..!
பெண்கள் பொதுவாக அதிகமாக வேலை பார்க்கின்றனர்.வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி.அவர்கள் அணியும் ஆடையினால் அவர்களுக்கு பல தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.பொதுவாக பெண்கள் தங்களின் உடைகள் மீது அதிகமாக கவனம் செலுத்துவர். குறிப்பாக அதிலும் உள்ளாடைகள் மீது இன்னும் அதிகமாக இருக்கும்.
அப்படிப்பட்ட பெண்களின் உள்ளாடையான பிரா குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் மாறுபட்ட தகவல்கள், வேறுபட்ட மருத்துவ ஆலோசனைகள் என முடிவே இல்லாமல் இருக்கும் விஷயமாகவே இருக்கும். இன்று வரை இந்த ஆராய்ச்சி சிந்துபாத் கத்தி வடிவில் நீண்டுகொண்டே இருக்கிறது, நிச்சயம் குழப்பம் நிறைந்த ஆய்வுகள் பட்டியலில் பெண்களின் உள்ளாடை தொடர்பான ஆய்வையும் காணலாம்.பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படும்… பிரா அணியாமல் இருப்பதால் பல சிக்கல்கள், இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான ஆலோசனைகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றது. இருப்பினும் எது உண்மை என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.
இதற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன், ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதைப்பற்றி பார்ப்போம்
- அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. பிரா அழுத்தத்தால் பல விளைவுகள் ஏற்படும் என்றும் இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.
2. பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில், 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில தரவுகளை பெற்றுள்ளார். அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
3. தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
4. இதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.
எனவே, பெண்கள் பிரா அணியவே கூடாதா என ரௌலியனிடம் கேட்ட போது, “பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, மாறாக மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, உடல்வலி, தலைவலி, உடல் இறுக்கம் போன்றவை தான் ஏற்படுகிறது, மேல் உள்ளாடை அணிவதற்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதை அணிவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுவது எல்லாம் வியாபார யுக்தி மட்டுமே’ என்று தெரிவித்துள்ளார்.