பெண்கள் தங்களைவிட வயதான ஆண்களை நேசிக்க அதிகம் காரணம்..!!

Default Image

பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அத்தோடு தங்களை முழுமையாக புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.தங்கள்  வாழ்க்கைத் துணை தங்களை விட அனுபவமும் ஆற்றலும் மிக்கவர்களாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இன்றைய இளம் பெண்களிடம் தலைதூக்கிவிட்டது. அதனால் அப்படிப்பட்டவர்களை தேடத் தொடங்கிவிட்டார்கள்.பெண் எதிர்பார்க்கும் புத்திசாலித்தனம் ஆணிடம் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையிலும் அவரோடு இணைந்து வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டால் என்ன என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இந்த சிந்தனையின் விளைவு திருமணத்தில் முடிகிறது.ஆண்களின் அதிகபட்ச அனுபவமும், பக்குவமும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டு இந்த இல்வாழ்க்கை இணைப்பு நடந்து விடுகிறது. எப்போதும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே அன்பு வளரும். பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.தங்களை விட வயதில் பெரிய ஆண்களை பெண்கள் பெரிதும் மதிக்கிறார்கள். இந்த மதிப்பே நாளடைவில் நம்பிக்கையாக மாறி விடுகிறது. ஆனால், அந்த பாதுகாப்பே பல பெண்களுக்கு எமனாகவும் மாறிவிடுகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது .
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்