பெண்களை புறக்கணிப்பதா..? இனி 3 மாதம் சிறை…அசத்தியது நேபாள அரசு…!!
மாதவிடாய் என்று பெண்களை தனிமை படுத்தினால் மூன்று மாத சிறைத்தண்டனை என்று புதிய சட்டத்தை நேபாள கம்யூனிச அரசு நிறைவேற்றியுள்ளது.
நேபாளத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்து மத அடிப்படையில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் என்று கூறி அவர்களுக்கென்று தனி குடிசை அமைத்து தங்க வைக்கின்றனர்.இந்த பழக்கத்தை நேபாளத்தில் ‘சாபத்தி’ என்று கூறுகின்றனர்.இதே போல பெண்கள் மாதவிடாய் காலங்களின் கோயில்களுக்குள் செல்வது , உணவு , மத சின்னங்கள், கால்நடைகள், ஆண்களை தொடுவதும் தடை செய்யப்பட்டடு காலகாலமாக நடைமுறையில் இருந்தது.
இப்படி பெண்களை தனிமை படுத்தி வைப்பதால் பல இன்னல்களை அவர்களை சந்நதித்து வருகின்றனர்.ஒரு இளம்பெண் குடிசையில் தூங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்துள்ளார்.இப்படி பல இறப்புகளை இதனால் பெண்கள் சந்தித்துள்ளனர்.இந்த மத சடங்கு மற்றும் சம்பிரதாய முறையை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்களும் முற்போக்காளர்களும் பல்வேறு கண்டனங்களை தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் கேரளத்தை ஆளும் கம்யூனிச அரசாங்கம் பெண்களுக்கெதிராக நடக்கு இந்த மூட நம்பிக்கை முறையை ஒழித்துக்கட்ட பாராளுமன்றத்தில் தனி சட்டம் இயற்றியுள்ளது.இந்த சட்டத்தின் அடிப்படையில் பெண்களை மாதவிடாய் காலம் , சடங்கு சம்பிரதாயம் என்று தனிமை படுத்தினாலோ அல்லது சடங்கு , சம்பிரதாய முறைகளை பின்பற்ற தூண்டினாலோ மூன்று மாத சிறை தண்டனை அல்லது 3,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாதவிடாயை கருத்தில் கொண்டு தங்களை புறக்கணிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பாதிப்பு என பல பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் சுழலின் நேபாள அரசின் இந்த முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
dinasuvadu.com