பெண்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை சரியாக வைத்துக்கொள்ள இதை செய்யுங்கள்..,
ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை அழகாகவும் சரியான ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக ஆன்டிஆக்சின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டாலே போதும். அதனை காண்போம்
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க
பெண்கள் மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்க க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதில் இண்டோல் த்ரீ கார்பினால் என்ற ஆண்டிஆக்ஸினால் உள்ளது.இது கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது.
கால்சியம் சத்து
பற்களுக்கும் எலும்புகளுக்கும் அத்தியாவசியமான ஒரு சத்து என்றால் அது கால்சியம் சத்து ஆகும். இது உடலுக்கு கிடைக்க வைட்டமின் d மிகவும் அவசியம்.வைட்டமின் d கீரைகள் மற்றும் ஆரஞ்சு பலம் போன்றவற்றில் கிடைக்கின்றன. இதை விட அதிகமாக கிடைக்க வேண்டும் என்றால் அது சூரிய ஒளியில் உள்ளது.
ஹார்மோன் மாற்றங்களால் பிரச்னையா?
பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க ஓமெகா 3,பாடிக் அசிட் வைட்டமின்C ,வைட்டமின் E அதிகமாக உள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொண்டால் போதுமானது.மூட்டைகள்,மீன் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் இந்த சத்துக்கள் அதிகமாக உள்ளன.
தேவையான ப்ரோட்டீன் கிடைக்கணுமா
பெண்களுக்கு தேவையான சத்துக்களில் ஓன்று தான் ப்ரோட்டீன். இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சரி செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.உடல் எடையும் அதிகரிக்க கூடாது ப்ரோட்டீன் கிடைக்க வேண்டும் என்றால் மூட்டை,பீன்ஸ் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
நரம்பு மண்டலத்தை பாதுகாக்க
நமது உடலில் புதிய செல்களை உருவாக்க போலிக் அமிலம் தான் கரணம்.நரம்பு மண்டலத்தை பாதுகாக்க பீட்ருட்,கேரட் போன்ற காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.இவை நமது மனா தைரியத்தை வளர்க்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.