பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை இன்று விசாரணை…!!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
2017-ம் ஆண்டு, சசிகலாவின் நெருங்கிய உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது சகோதரர் திவாகரன் வீடுகள், அலுவலங்களிலும், சுதாகரன், தினகரன், சசிகலாவின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் வீடுகள், பண்ணை வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், சசிகலாவின் கணவர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது கணவரின் உடல்நிலை போன்ற காரணங்களால் விசாரணை தள்ளிப்போனது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை இன்று நடத்த திட்டமிட்டுள்ளனர்.