புல்லட் ரெயிலில் பயணிகளை குத்திய மர்மநபர் ! ஒருவர் பலி…ஜப்பானில் பரபரப்பு..!

Default Image

ஜப்பானில் நேற்று இரவு டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 800-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இரவு 10 மணியளவில் (இந்திய நேரப்படி பகல் 1 மணி) ரெயிலில் பயணம் செய்த மர்மநபர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரி குத்தினார். இதனால் பயத்தில் அலறிய பயணிகள் ஓடும் ரெயிலில் அங்கும் இங்குமாக ஓடி பதுங்கினர். பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஆண் பயணி ஒருவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

மேலும் காயம் அடைந்த 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த ரெயில் ஒட்டாவா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு தயாராக காத்திருந்த போலீசார் ரெயிலில் ஏறி கத்திகுத்து நடத்திய மர்ம நபரை கைது செய்தனர்.

அவனது பெயர் இச்சிரியோ கொஜிமா (22). அவரிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா? என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்