அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் புற்றுநோயுடன் போராய 6 வயது சிறுவன் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் புற்றுநோயிலிருந்து மீண்டு மீண்டும் பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நியூபரி நகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஜான் ஆலிவர் அவர் 3 வயதாக இருக்கும் போதே லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (lymphoblastic leukemia) என்கிற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனை முதலில் அவருடைய பெற்றோர் கண்டறிந்து உள்ளனர்.இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளைப் பெற்று வந்த சிறுவனால் மூன்று வருடங்களாக பள்ளியைத் தொடர முடியவில்லை.இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் மாதத்துடன் கீமோதெரபி என்கிற சிகிச்சை முடிந்த நிலையில் தான் இந்நோயில் இருந்து மீண்டு வந்த ஜான் ஆலிவர் தன் பள்ளிக்கு மீண்டும் திரும்பினான்.அப்போது அவருக்காக அங்கு நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் காத்திருந்தது.ஆலிவர் உள்ளே சென்ற போது பள்ளி நுழைவாயிலில் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று சக மாணவர்கள் தங்கள் கைகளை தட்டி பெருத்த சப்த்த்துடன் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.இதனைக் கண்ட ஆலிவர் மற்ற மகிழ்ச்சி புன்னகையோடு உள்ளே சென்றார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…