புத்தாண்டை வரவேற்கும் விதமாக மியான்மர் நாட்டில் பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாட்டம்…!
புத்தாண்டை வரவேற்கும்விதமாக மியான்மர் நாட்டில் பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்நாட்டு மரபுப்படி வரும் 17-ம் தேதி புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டை வரவேற்கும்வகையில் நாடு முழுவதும் வண்ணமயமான கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, யாங்கூன் நகரில் பொது இடங்களில் திரண்ட மக்கள், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வாகனங்களில் வருவோரையும் விட்டுவைக்காமல் தண்ணீரை ஊற்றினர். இவ்வாறு தண்ணீரை ஊற்றிக் கொள்வதால், கடந்த ஆண்டின் கசப்பான நினைவுகள் அகன்றுவிடும் என்று மியான்மர் மக்கள் நம்புகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.