புதிய 2000 ருபாய் நோட்டுக்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பது பொய்யா…??
கடந்த டிசம்பர் மாதம் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு புதிய 2000 நோட்டுகள் கொண்டுவரப்பட்டது.மேலும் அரசின் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் மற்றும் கள்ள பணம் ஒழியும் என பாரத பிரதமர் உறுதியளித்தார்.அந்த புதிய 2000 ருபாய் நோட்டுக்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பதாக அதனை வெளியிடும்போது பா.ஜ.க. வினர் கூறினார்கள். கள்ளப் பண புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றெல்லாம் கதை அளந்தார்கள் ஆனால் முன்பு எப்போதையும் விட இப்போதுதான் கள்ள நோட்டுகள் – குறிப்பாக 2000 ருபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அப்போது இவர்கள் கூறியது வழக்கம் போலவே பொய்தான் என்று நிரூபணம் ஆகிறது. ஆனால் இந்த பணம் தீவிரவாதிகளுக்கு பட்டுவாடா செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று மற்றுமொரு பொய் சொல்லுகிறார்கள். அது எப்படி என்பதை அவர்கள் விளக்கி சொல்லவேண்டும். தீவிரவாதிகள் தங்களது சேவைகளை இப்போது இலவசமாகவே செய்கிறார்களா?