புதிய விசா நடைமுறைகளால் பிரிட்டனின் இந்தியர்களுக்கு நன்மை!
இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் ப பிரிட்டனின் புதிய விசா நடைமுறைகளால் பயனடைய உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஆண்டுக்கு இருபதாயிரத்து எழுநூறு விசாக்கள் மட்டுமே வழங்குவது என பிரிட்டன் கட்டுப்பாடு வைத்திருந்தது. இப்போது உள்துறை அமைச்சகம் அந்த வரம்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மென்பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் பிரிட்டனுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு இந்தியத் தொழில்வணிகக் கூட்டமைப்புத் தலைவர் ராகேஷ் ஷா வரவேற்புத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கான விசா நடைமுறை சீனா உள்ளிட்ட 26நாடுகளுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. கல்வி விசா தளர்வு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. புதிய விசா நடைமுறைகள் ஜூலை ஆறாம் நாளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.