புதிய சர்ச்சையை கிளப்பிய டிரம்பின் மனைவி..!
புதிய சர்ச்சை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா, அணிந்து சென்ற உடையால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களுக்கு, டெக்சாஸில் அமைக்கப்பட்டுள்ள காவல் மையத்தை பார்வையிடச் சென்ற மெலானியா டிரம்ப், பச்சை நிற கோட் ஒன்றை அணிந்திருந்தார். அதில், நான் உண்மையில் கவலைப்படவில்லை. நீங்கள்? என்பதை குறிக்கும் வகையில், I really dont care, do u? என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த உடை விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் எந்த உள் அர்த்தமும் இல்லை என அவரது செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், பொய் செய்தி வெளியிடும் ஊடகங்களையே மெலானியா தனது உடையில் குறிப்பிட்டிருப்பதாக, அதிபர் டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.