புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு…ஆப்கானில் பரிதாபம்..!!
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீரென உயிரிழந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் வடக்கே பன்ஷீர் பகுதியில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் குழந்தைகள் அனைத்தும் உயிரிழந்து விட்டன. இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது. தனியார் ஆய்வக உதவியுடன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தெரிந்தபின்னர் அதுபற்றி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தைகளின் மர்ம மரணத்திற்கான காரணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
dinasuvadu.com