பில் கேட்ஸுக்கு ரோல் மாடலான இந்திய மருத்துவர் ?
உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவருமான பில் கேட்ஸ் தனது வாழ்க்கையின் கதாநாயகராக இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தான் கதாநாயகர்களாகக் கருதும் ஐந்துபேரில் மருத்துவர் மேத்யூ வர்க்கீசும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்ற மருத்துவர்களைப் போல் ஸ்டெதஸ்கோப் வைத்திருக்காமல் கையில் சிறு சுத்தியலும் கைகால்களின் நீளத்தை அளப்பதற்கான நாடா அளவியும் வைத்துள்ள மேத்யூ வர்க்கீஸ் பார்ப்பதற்கு ஒரு மரத்தச்சர் போல் இருப்பதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
பில் கேட்சின் பாராட்டுக் குறித்துக் கருத்துத் தெரிவித்த மேத்யூ வர்க்கீஸ், இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பணியாற்ற வேண்டும் என்கிற உந்துதலை மற்ற மருத்துவர்களிடம் இது ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். போலியோ இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்கப்பட்டதாக 2011ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் முடமாகியுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் பணியை மேத்யூ வர்க்கீஸ் செய்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….