பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு மீனின் தோலால் அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை..!
பிரேசில் நாட்டில், பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு மீனின் தோலால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற அறுவை சிகிச்சை உலகிலேயே முதன்முறையாக இந்த பெண்ணுக்கு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 23 வயதான ஜூசிலன் மாரின் ஹோ என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்துள்ளார். 15 வயதில் மருத்துவர்களிடம் பரிசோதித்தபோது இவர் சிண்ட்ரோம் குறைபாட்டால் (Mayer-Rokitansky-Küster-Hauser) பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து தனக்கு இனப்பெருக்க உறுப்புகள் இல்லாததும் கருப்பை இல்லாததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி அவ்வபோது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 8 வருடங்கள் கழித்து தற்போது அவருக்கு டிலாப்பியா என்ற மீனின் தோல்கள் பயன்படுத்தி ‘நியோ வஜைனாபிளாஸ்டி’ எனும் பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக மீனின் தோலில் இருந்து பிறப்புறுப்பு வடிவம் வெட்டியெடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. உடலில் பொறுத்தியவுடன் மீனின் தோலானது ஸ்டெம் செல்கள் போன்று செயல்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக ஆய்வகத்தில் வைரஸ்கள் முதலிய நுண்ணுயிரிகளை அகற்ற கிருமி நீக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து இனப்பெருக்க உறுப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகுதான் காதலனுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.