பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு!
பிரபல அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
பாரீஸ் நகரில் நடைபெற இருந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது தோள்பட்டை சதையில் கடும் வலி உள்ளது என்றார். இதனால் முழு ஆட்டத்திறனோடு தாம் இல்லை என்ற அவர், இதனால் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினார்.
23 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்ற செரினா, பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா சரபோவாவை எதிர் கொள்ள இருந்தார். ஆடுகளத்தில் பரம வைரிகளான இருவரும் பல ஆண்டுகளுக்கு பின்னர் மோதிக் கொள்ளும் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் செரீனாவின் திடீர் விலகல் டென்னிஸ் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.