பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்க்கோசியிடம் தேர்தல் முறைகேடு வழக்கில் போலீஸ் காவலில் விசாரணை!
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான நிகோலஸ் சர்க்கோசியிடம் தேர்தல் முறைகேடு வழக்கில் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்படுகிறது.
2007ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் லிபிய அதிபர் முகமது கடாபியிடம் நிதி பெற்று செலவிட்டதாக சர்க்கோசி மீது புகார் கூறப்பட்டது. 2012ம் ஆண்டுடன் அவரது ஆட்சி முடிவடைந்த நிலையில், 2013ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சர்க்கோசியிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நிகோலஸ் சர்க்கோசிக்கு நெருக்கமான அமைச்சரான பரைசே ஹோர்டேபுக்ஸ் (Brice Hortefeux)-இடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளன
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.