பிரதமர் மோடி ஒரு பாதுகாப்பற்ற சர்வாதிகாரி- ராகுல்….!!
பிரதமர் மோடி ஒரு பாதுகாப்பற்ற சர்வாதிகாரி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து கணிணிகளையும் உளவு பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மத்திய உளவு அமைப்பான ரா, ஏ.என்.ஐ, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவை போலீஸ் கட்டுப்படுத்தும் நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி ஒரு பாதுகாப்பற்ற சர்வாதிகாரி என்பதை இந்த நடவடிக்கை நிரூபிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் அமீத் ஷா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.அவரது டிவிட்டர் பதிவில் இந்திய வரலாற்றில் 2 பாதுகாப்பற்ற சர்வாதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒருவர் எமர்ஜென்சியை அறித்தவர் என்றும் மற்றொருவர் சாதாரண மக்களின் கடிதங்களை படிக்க விரும்பியவர் எனவும் அவர்கள் யார் என தெரிகிறதா ராகுல்காந்தி? என அவர் கேட்டுள்ளார்.