பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!அன்னிய மண்ணில் இந்திய பாடலை கேட்டது உணர்வுபூர்வமானது!
பிரதமர் நரேந்திர மோடி ,அன்னிய மண்ணில் இந்திய பாடலை கேட்டது, மிக உன்னதமான உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி சீனா சென்றிருந்த போது, Wuhan நகரில் வாத்தியங்களை இசைத்து வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த 1982ஆம் வெளியான, ஆஷா போஸ்லே பாடிய இந்தி பாடல் இசைக்கப்பட்டது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இந்திய கலைஞர்களின் புகழ், உலகம் முழுவதும் பரவியுள்ளதாக பாராட்டியுள்ளார். பாடலை கேட்டபோது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று பாடகி ஆஷா போஸ்லே ட்விட்டரில் கேட்டிருந்த நிலையில், அன்னிய மண்ணில் இந்திய பாடலை கேட்டது, மிக உன்னதமான உணர்வை ஏற்படுத்தியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.