பிரசவ குழம்பு செய்வது எப்படி ?
பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். பிரசவத்திற்க்கு பின்பு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கவும், வாயுத்தொல்லை நீங்கவும் இந்த குழம்பு உதவியாகயிருக்கும்.இது முற்றிலும் ஒரு மூலிகை குழம்பு ஆகும் இதில் தக்காளி, வெங்காயம் ,ஆகியவை சேர்க்கப்படவில்லை .இதனை மற்றவர்களும் சாப்பிடலாம் .
தேவையான பொருட்கள் :
வர மிளகாய் -3
விரலி மஞ்சள் -2 துண்டு
பெருங்காயம் -ஒரு சிறிய துண்டு
மிளகு -21
புளி -ஒரு எலுமிச்சை அளவு
சீரகம் -1 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
பூண்டு -1
கறிவேப்பில்லை -சிறிதளவு
வடகம் (தாளிப்பதற்கு)-சிறிதளவு
அரிசித்திப்பிலி -1 தேக்கரண்டி
பரங்கி சட்டை- சிறிதளவு
கண்டந்திப்பிலி -2 தேக்கரண்டி
நல்லெண்ணை-சிறிதளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இவை அனைத்தையும் வறுத்து கொள்ளவும். பின்பு இதை அரைத்து தூளாக்கி கொள்ளவும் .பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி அதில் வடகம் ,கருவேப்பிலை,பூண்டு,உப்பு போட்டு தாளிக்க வேண்டும்.அதன் பின்பு அரைத்த தூளை 4 தேக்கரண்டி சேர்த்து அதில் சிறிதளவு புளி சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும். அதையும் ஊற்றி கொதிக்க வைத்து நன்கு வற்றியவுடன் இறக்க வேண்டும்.இப்போது உடம்புக்கு ஏற்ற மூலிகை குழம்பு தயார் .