பிரசவ குழம்பு செய்வது எப்படி ?

Default Image

பிரசவம் என்பது  பெண்களுக்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். பிரசவத்திற்க்கு பின்பு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கவும், வாயுத்தொல்லை நீங்கவும்  இந்த குழம்பு உதவியாகயிருக்கும்.இது முற்றிலும் ஒரு மூலிகை குழம்பு ஆகும் இதில் தக்காளி, வெங்காயம் ,ஆகியவை சேர்க்கப்படவில்லை .இதனை மற்றவர்களும் சாப்பிடலாம் .

தேவையான பொருட்கள் :

வர மிளகாய் -3

விரலி மஞ்சள் -2 துண்டு

பெருங்காயம் -ஒரு சிறிய துண்டு

மிளகு -21

புளி -ஒரு எலுமிச்சை அளவு

சீரகம் -1 தேக்கரண்டி

உப்பு -தேவையான அளவு

பூண்டு -1

கறிவேப்பில்லை -சிறிதளவு

வடகம் (தாளிப்பதற்கு)-சிறிதளவு

அரிசித்திப்பிலி -1 தேக்கரண்டி

பரங்கி சட்டை- சிறிதளவு

கண்டந்திப்பிலி -2 தேக்கரண்டி

நல்லெண்ணை-சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இவை அனைத்தையும் வறுத்து கொள்ளவும்.  பின்பு இதை அரைத்து தூளாக்கி கொள்ளவும் .பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி அதில் வடகம் ,கருவேப்பிலை,பூண்டு,உப்பு போட்டு தாளிக்க வேண்டும்.அதன் பின்பு அரைத்த தூளை 4 தேக்கரண்டி சேர்த்து அதில் சிறிதளவு புளி சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும். அதையும் ஊற்றி கொதிக்க வைத்து நன்கு வற்றியவுடன்  இறக்க வேண்டும்.இப்போது உடம்புக்கு ஏற்ற மூலிகை குழம்பு தயார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்