பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா..?
தமிழ், தெலுங்கில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார்.
கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனனும் இதில் கலந்துகொண்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. வார இறுதி நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்ல மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மொத்தம் ரூ.45 கோடி செலவு செய்துள்ளனர் என்கிறார்கள்.
மோகன்லால் மலையாள படத்தில் நடிக்க ரூ.3.50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மம்முட்டி ரூ.3 கோடி வாங்குகிறார். பிருதிவிராஜ் ரூ.1.50 கோடியும், நிவின்பாலி ரூ.80 லட்சமும் பெறுவதாக கூறப்படுகிறது. இவர்கள் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மலையாளத்தில் வாங்குவதை விட கூடுதல் சம்பளம் கேட்கிறார்கள்.