பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறையை கைவிட வலியுறுத்தி!யூனியன் கவுன்சில் கட்டிடத்திற்கு முன் காலணிகளை அடுக்கி போராட்டம்!
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கட்டிடத்திற்கு வெளியே நான்கு ஆயிரத்து ஐநூறு காலணிகளை அடுக்கி வைத்து போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் வகையில் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறைகளை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்னர்.
ஐநா: ‘காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.பாலஸ்தீனியத்தில் இருந்து வெளியேறிய அகதிகள் நாடு திரும்ப அனுமதிக்க வலியுறுத்தி, காசா முனையில் கடந்த மாதம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, காசா முனையில் உள்ள இஸ்ரேல் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது சிலர், இஸ்ரேல் தடுப்புச் சுவர்களை தகர்க்க முயன்றனர்.
இதையடுத்து, கூட்டத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். பீரங்கி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில், 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 1400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 760 பேருக்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன. மற்றவர்கள் ரப்பர் தோட்டா, கண்ணீர்புகை குண்டு வீச்சினால் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறைகளை கைவிடக்கோரி ஐரோப்பிய யூனியன் கவுன்சிலிங் கட்டிடத்திற்கு முன் காலணிகளை அடுக்கி வைத்து போராட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள் தினச்சுவடுடன்.