பாரீசில் வன்முறை ! 1500 அகதிகள் மீட்பு..!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள அகதிகள் முகாமில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, ஆயிரத்து 500 பேர் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பாரீசின் வடகிழக்கே உள்ள ((Canal de Saint-Denis)) கேனல் டெ சைண்ட் – டெனிஸ் என்ற இடத்தில் ஆப்பிரிக்க அகதிகள் உள்ளனர்.
அண்மையில் அந்த முகாம்களில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த ஆயிரத்து 500 பேரை மீட்ட போலீசார், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரார்டு கோல்லோம்ப் ((Gerard Collomb))) உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.