பாஜகவை வீழ்த்த டெல்லியில் ஆலோசனை…சந்திரபாபு நாயுடு தகவல்…!!
பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தூதராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அமராவதியில் சந்தித்து பேசினார்.
பின்னர், சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் எண்ணற்ற தலைவர்களை சந்தித்து விட்டேன். மம்தா பானர்ஜியை 19 அல்லது 20-ந் தேதி சந்திக்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிரான இந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 22-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில், அணியை முன்னெடுத்து செல்வது பற்றியும், அமைப்புரீதியான கட்டமைப்பை உருவாக்குவது பற்றியும், எதிர்கால நடவடிக்கை பற்றியும் முடிவு எடுக்கப்படும். தொகுதி பங்கீடு பற்றி சிறிது காலத்துக்கு பிறகு விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
dinasuvadu.com