பாக்.,முன்னாள் அதிபர்க்கு மரண தண்டனை..!
- தேசதுரோக வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு மரண தண்டனை விதிப்பு.
- துபாயில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வயது70 இவர் 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபராக இருந்த சமயத்தில் பாகிஸ்தானில் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலை அறிவித்தார் அவருடைய இந்த அறிவிப்பு தொடர்பாக அவர் மீது கடந்த2013 ஆம் ஆண்டில் டிசம்பரில் பெஷவர் நீதிமன்றத்தில் தேசதுரோக வழக்கு தொடரப்பட்ட நிலையில் முஷாரப் மீது 2014 ஆம் ஆண்டு மார்ச்31ந் தேதி குற்றம் சாட்டப்பட்டது.(இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
அதே ஆண்டில் செப்டம்பர் மாதமே அரசு தரப்பில் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இருந்தாலும் மேல்முறையீட்டு மன்றங்களில் வழக்கு காரணமாக இந்த வழக்கு நீடித்து வந்தது.
கடந்த2016 ஆம் ஆண்டு முஷாரப் பாகிஸ்தானை விட்டு உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறி துபாய் சென்றார். இந்நிலையில் துபாயில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான இந்த தேசதுரோக வழக்கின் மீது பெஷவர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வக்கர் அஹ்மத் சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின் 3 பேர் அடங்கிய பெஞ்ச் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.