பாகிஸ்தான் 86 / 3 விக்கெட்
ஆசிய கோப்பையில் இன்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இந்தியா , பாகிஸ்தான் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இமாம் உல் ஹக் ,பாக்கர் ஜமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்திய அணியின் புவனேஷ்குமார் வீசிய 2.1 ஓவரில் இமாம் உல் ஹக் 7 பந்துகளில் 2 எடுத்து தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.பாபர் ஆஸ்ம் அடுத்தது களமிறங்கினார்.தொடர்ந்து புவனேஷ்குமார் வீசிய 4.01 ஓவரில் பாக்கர் ஜமான் 9 பந்துகளில் ரன் எடுக்காமல் அட்டமிழந்தார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் 3 ரன்களில் இந்திய அணி வீழ்த்தியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.3ஆவது விக்கெட்டுக்கு பாபர் ஆஸ்ம் 62 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.ஷோயப் மாலிக் 50 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து நிதானமாக ஆடி களத்தில் உள்ளார்.பாகிஸ்தான் அணியினர் 21.2 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.
DINASUVADU