பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் இன்று கைதாகிறார்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் இன்று கைதாகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் நாவஸ் செரிப் ஆவார்.இவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது.
இவர் மீது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஊழல் பணத்தில் நவாஸ் செரீப் லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதிகள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், நவாஸ் செரீப் மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம்.
இந்நிலையில் அவரை அவரது மகளையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருன்கின்றனர்.மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் லண்டனில் உள்ளார்.இந்நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு வரும் பொழுது கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் .
முன்னதாக ஊழல் குற்றச்சாட்டுகள் நிருப்பிக்கப்பட்டதால் தான் அவருடைய பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.