பாகிஸ்தான் இணையத்தில் சாதனை புரிந்த விராட் கோலி
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் புரிந்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தான் பக்கம் இழுத்து வைத்துள்ளார். மேலும் இவர் ரன் மிஷின் எனவும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுகிறார்.
இவர் தற்போது பக்கத்து நாட்டில் இணையத்தில் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார். அது என்னவென்றால், பாகிஸ்தான் நாட்டில் இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாகத்தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, வேகபந்து வீச்சாளர் முகமது அமிர், அஹமது சேஷாத், ஆகியோர் உள்ளனர்.